» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடு முழுவதும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
வெள்ளி 2, ஜனவரி 2026 12:29:19 PM (IST)

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், வாய்ஸ் ஓவர் வைஃபை அழைப்பை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.
இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும். ‘வைஃபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.
வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான ‘மொபைல் சிக்னல்’ உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் ‘வைஃபை காலிங்’ என்பதை மட்டும் ‘செட்டிங்ஸ்’ அமைப்பில் இயக்க வேண்டும். இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:14:44 PM (IST)

தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:13:01 AM (IST)

கேரளாவில் நெகிழ்ச்சி: மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த 10 மாதக் குழந்தை!!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:46:35 AM (IST)

மும்பை மெட்ரோ கட்டுமான விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்! காங்கிரஸ் கடும் கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:24:31 PM (IST)

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
சனி 14, பிப்ரவரி 2026 12:36:55 PM (IST)

வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் : தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:44:16 PM (IST)

