» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு : ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவிப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 3:47:34 PM (IST)

ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.
ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வளைகுடா நாடுகளில் இந்தப் படம் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு ஒற்றனாகச் செல்லும் ரன்வீர் சிங்கின் நடிப்பு படத்தின் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வலதுசாரி சிந்தனை, பிரிவினை வாதம் தூண்டுவதாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன. நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இந்தப் படத்தின் அரசியல் குறித்து தனக்கு விருப்பமில்லை எனக் கூறியது சர்ச்சையானது.
கடந்த டிச. 29ஆம் தேதி வரைக்கும் மட்டுமே உலக அளவில் இந்தப் படம் ரூ.1,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இன்றுவரை ரூ.784.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இந்தியாவிலேயே ரூ. 1,000 கோடியை எட்ட வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: பாலிவுட் திரைப்படமான ‘துரந்தர்’ படத்துக்கு லடாக்கில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.
லடாக்கில் விரிவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினால் லடாக் சினிமாட்டிக் அனுபவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயக்குநருக்கு ஆதரவு தெரிவிக்கவும் மேலும் இங்கு அதிகமானோர் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கவும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:18:58 PM (IST)

ராஜஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:14:44 PM (IST)

தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:13:01 AM (IST)

கேரளாவில் நெகிழ்ச்சி: மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த 10 மாதக் குழந்தை!!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:46:35 AM (IST)

மும்பை மெட்ரோ கட்டுமான விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்! காங்கிரஸ் கடும் கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:24:31 PM (IST)

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
சனி 14, பிப்ரவரி 2026 12:36:55 PM (IST)

