» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க திட்டமா? சபாநாயகர் புகாருக்கு காங். எம்.பி. சுதா மறுப்பு!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:00:00 PM (IST)

பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க முயன்றதாக சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா கூறினார்.
மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சுதா, "மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய். ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமர்ந்து போராடினோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசியலில் நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பதவி வகித்து பிரதமர் மோடி புதிய சாதனை!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:19:54 PM (IST)

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

கேரளத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது!
வெள்ளி 20, மார்ச் 2026 4:13:29 PM (IST)

