» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தேசிய அளவில் 93.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
கடந்த பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை நடைபெற்ற இந்தப் பொதுத்தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 25.08 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 24.71 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதமான 93.66%-ஐ விட இந்த ஆண்டு (93.7%) தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99% ஆகும். இது மாணவர்களின் தேர்ச்சியை விட 1.3% அதிகமாகும். 53,368 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும், 2.21 லட்சம் மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மண்டல வாரியான தேர்ச்சி:
மண்டல அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா (99.79%) முதலிடத்தைப் பிடித்துள்ளன. சென்னை மண்டலம் 99.58% தேர்ச்சி பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
2-ம் கட்டத் தேர்வு (மதிப்பெண் மேம்பாடு): நடப்பாண்டு முதல் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் முதற்கட்டத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பினால், அடுத்த மாதம் மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்வை எழுதலாம்.
அதிகபட்சமாக 3 பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், முதற்கட்டத் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியுற்றவர்கள் அல்லது தேர்வு எழுத வராதவர்கள் இந்த இரண்டாம் கட்டத் தேர்வை எழுத முடியாது.
தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை இணையதளம் மற்றும் செல்போன்கள் வாயிலாக ஆர்வமுடன் பார்த்து, நண்பர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர். கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் ஒருவழியாகத் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
வியாழன் 4, ஜூன் 2026 5:46:53 PM (IST)

சுற்றுச்சூழல் தினத்தில் புதிய புரட்சி: மக்கும் பால் பாக்கெட் அறிமுகம் செய்த மத்திய அரசு!
வியாழன் 4, ஜூன் 2026 5:34:45 PM (IST)

51 வயதில் செய்த குற்றத்திற்கு 84 வயதில் தண்டனை : சமூக வலைத்தளங்களில் விவாதம்!
புதன் 3, ஜூன் 2026 4:12:59 PM (IST)

உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி; 11 பேர் படுகாயம் - டெல்லியில் சோகம்!
புதன் 3, ஜூன் 2026 12:38:32 PM (IST)

கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூர கொலை: தாய் - வளர்ப்புத் தந்தை கைது!
புதன் 3, ஜூன் 2026 10:48:27 AM (IST)

கேரளத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை: பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 5:52:35 PM (IST)


