» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)
பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கினால், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதன் எதிர்வினையாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை தடுத்து வரும் ஈரான் ராணுவம், விதிகளை மீறிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் 14 கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதில் 7 கப்பல்கள் இந்தியக் கொடியுடனும், மற்றவை லைபீரியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளுடனும் பயணித்தன.
அனைத்துக் கப்பல்களும் வரிசையாக நீரிணையை கடக்க முயன்றபோது, அங்கு வந்த ஈரானின் புரட்சிகர காவல் படைக்குச் சொந்தமான படகுகள் எவ்வித எச்சரிக்கையும் இன்றி கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தின. மேலும் சிறிய ரக ஏவுகணைகளும் வீசப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலில் ஒரு கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் சேதமடைந்தன. மற்றொரு கப்பலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. எனினும், அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து, 13 கப்பல்கள் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்கே திரும்பின. அதேநேரம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ஒரு கப்பல் மட்டும் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலியை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து விதிகளை மீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

51 வயதில் செய்த குற்றத்திற்கு 84 வயதில் தண்டனை : சமூக வலைத்தளங்களில் விவாதம்!
புதன் 3, ஜூன் 2026 4:12:59 PM (IST)

உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி; 11 பேர் படுகாயம் - டெல்லியில் சோகம்!
புதன் 3, ஜூன் 2026 12:38:32 PM (IST)

கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூர கொலை: தாய் - வளர்ப்புத் தந்தை கைது!
புதன் 3, ஜூன் 2026 10:48:27 AM (IST)

கேரளத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை: பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 5:52:35 PM (IST)

பிஎஃப் சந்தாதாரர்கள் இனி சில வினாடிகளில் பணத்தைப் பெறலாம்: புதிய சேவை துவக்கம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 5:17:03 PM (IST)

ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் பிகார் மாணவர் முதலிடம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:30:23 AM (IST)


