» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)
"தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியைப் பரிசளிப்பார்கள்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 131-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை (தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா), தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து முறியடித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வந்ததற்கான காரணத்தை கெஜ்ரிவால் விளக்கியுள்ளார்.
ஸ்டாலின் எனது சகோதரர்!
நேற்றிரவு சென்னை வந்தடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "டெல்லியில் நாங்கள் செய்த நல்ல பணிகளை மத்திய பாஜக அரசு திட்டமிட்டுச் சிதைத்துவிட்டது. அந்த கசப்பான அனுபவங்களை நான் தமிழக மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலின் எனது சிறந்த நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர்.
இருப்பினும், நான் அவருக்காகப் பிரச்சாரம் செய்ய வந்ததற்கு முக்கியக் காரணம், கடந்த ஐந்தாண்டுகளில் அவர் தமிழ்நாட்டிற்குச் செய்துள்ள மகத்தான பணிகளே ஆகும். வரும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து மக்களிடம் விரிவாகப் பேசுவேன். மேலும், "தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியைப் பரிசளிப்பார்கள்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

