» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)



ராஜஸ்தானில் நாளை பிரதமர் திறந்து வைக்க உள்ள நிலையில், சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானின் பலூத்ரா நகரில் பச்பத்ரா பகுதியில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரசுடன் இணைந்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இதனை செயல்படுத்த உள்ளது. பிரதமர் மோடி இதனை நாளை துவக்கி வைக்க இருந்த நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த கரும்புகை வான் வரை பரவியது. எனினும், அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இறக்குமதியை சார்ந்திராமல் உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்த சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கான திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory