» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் 13 வயது மகளுக்கு ஆன்லைன் கேமிங் தளம் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பித் தொல்லை கொடுத்த நபரை மகாராஷ்டிரா சைபர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அக்சய் குமார் மற்றும் டிவிங்கிள் கன்னா தம்பதியரின் மகள் நிதாரா (13). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியான புகைப்படங்களைக் கேட்டு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த நிதாரா, உடனடியாகத் தனது தாய் டிவிங்கிள் கன்னாவிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்சய் குமார் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, குழந்தைகளுக்கு ஆன்லைன் தளங்களில் ஏற்படும் இத்தகைய ஆபத்துகள் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
அக்சய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட அந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.
தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரின் மகளுக்கே ஆன்லைன் கேமிங் தளத்தில் இத்தகைய தொல்லை நேர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: குழந்தைகள் ஆன்லைனில் கேம் விளையாடும்போது அல்லது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் யார் யாருடன் உரையாடுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், இது போன்ற புகார்களை உடனடியாகச் சைபர் கிரைம் பிரிவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கூடாரம் சரிந்தது: ஒரே வாரத்தில் 3-ஆவது எம்பி அதிரடி ராஜிநாமா!
வியாழன் 11, ஜூன் 2026 12:39:46 PM (IST)

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)


