» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தங்கம் வாங்காதீர்கள் என்பது அறிவுரை அல்ல, தோல்வியின் சான்று: பிரதமர் மீது ராகுல் சாடல்!
திங்கள் 11, மே 2026 4:39:29 PM (IST)
மேற்காசியப் போர் நெருக்கடி மற்றும் அன்னியச் செலாவணி சேமிப்பைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகளைப் பொருளாதாரத் தோல்வியின் அடையாளம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
பிரதமரின் இந்த உரைக்குத் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: "நேற்று மோடி அவர்கள் மக்களைத் தியாகம் செய்யக் கேட்டுக்கொண்டார். இது வெறும் அறிவுரை அல்ல, கடந்த 12 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள பொருளாதாரத் தோல்வியின் சான்று.
மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு நாட்டை அவர் கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அரசு தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்கிறது. நாட்டை நடத்துவது என்பது இனி ஒரு சமரசம் செய்துகொண்ட பிரதமரால் இயலாத காரியம்." இவ்வாறு ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளைச் சரி செய்யாமல், மக்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்படும் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!
வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!
புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)



காங்கிரஸ் ஒரு முட்டாள்மே 12, 2026 - 06:27:20 PM | Posted IP 162.1*****