» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:59:56 PM (IST)
இந்திய நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாகப் பதவியில் இருந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற ஜெனரல் உபேந்திர திவேதியின் பணிக்காலம் இன்றுடன் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து, புதுடெல்லியில் அவருக்கு ராணுவ முறைப்படியான பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட ராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பு மரியாதையைப் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ள தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில், நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார். கடந்த 1986-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை மற்றும் பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றிய நீண்ட கள அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)


