» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஸா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்!

புதன் 15, நவம்பர் 2023 5:21:10 PM (IST)



காஸாவில் உள்ள பிரதான மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் இன்று நுழைந்துள்ளது.

மத்திய காஸாவில் உள்ள பிரதான மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை, ஹமாஸ் கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அந்த மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ.15) காலை மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது.

மருத்துவமனையின் வளாகத்துக்குள் இஸ்ரேலின் டாங்கிகள் நுழைந்துள்ளதாகவும் அவசர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் உள்பட மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் நுழைந்திருப்பதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், துல்லியமான மற்றும் இலக்குசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் போர் ஹமாஸுடன்தான், பொதுமக்களோடு அல்ல என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளது. 

ஹமாஸ் பதுங்கியிருக்கும் இடங்கள் மிக துல்லியமாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் மட்டும் தாக்குதலுக்குத் தயாராக நுழைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது இஸ்ரேலிய ராணுவம். ராணுவ வீரர்கள் ஒலிபெருக்கி மூலமாக மருத்துவமனையில் இருக்கும் இளைஞர்களைச் சரணடையக் கூறி அறிவுறுத்தியுள்ளனர்.

மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் ராணுவத்தால் தகர்க்கப்பட்டுள்ளன. மருத்துவமமைக்குள் சோதனையில் ஈடுபட்டு வருகிறது, இஸ்ரேல் ராணுவம். அங்குள்ள மக்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை எந்தவித ஹமாஸ் கட்டுபாட்டுக்கான ஆதாரமும் பிணைக்கைதிகள் இருப்பதற்கான ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory