» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் தாக்குதல்களில் 27ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி - காஸா அரசு தகவல்!

வெள்ளி 2, பிப்ரவரி 2024 3:31:39 PM (IST)

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்தாண்டு அக்.7 ஹமாஸின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 190 பேர் காயமகாயமடைந்ததாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல்-ஹாமஸ் மோதல் வெடித்ததிலிருந்து இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸதீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், அல்-அமல் மருத்துவமனை மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு அருகாமையில் இஸ்ரேல்  நடத்திய தாக்குதல்கள் தொடர்ச்சியாக 11வது நாளாகத் தொடர்ந்ததாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

இந்தியன்Feb 2, 2024 - 06:18:20 PM | Posted IP 162.1*****

ஹமாஸ் தீவிரவாதிகள் தான் காசா பொதுமக்கள் கூட்டத்திலும் , ஆஸ்பத்திரியிலும் புகுந்து ஒளிந்து கொண்டு, ராக்கெட் போன்ற ஆயுதங்களை ஏவி விட்டு கண்ணாமூச்சி விளையாடிவிட்டு போய் விட்டது. அங்கு பாதிபேர் பாகிஸ்தான் மக்கள் மாதிரி ஹமாஸ் காட்டுவாசி மக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory