» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊழல் வழக்கில் மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனை பாதியாக குறைப்பு!

சனி 3, பிப்ரவரி 2024 12:28:56 PM (IST)

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் தண்டனைக் காலம், 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக நஜீப் ரசாக், கடந்த 2009ல் பதவியேற்றார். அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, 1 எம்.டி.பி., என்ற பெயரில் மலேஷிய மேம்பாட்டு நிறுவனத்தை, அப்போது அவர் நிறுவினார்.

அரசின் முதலீட்டு நிறுவனமான இதன் நிதியை, அவர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1 எம்.டி.பி., நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், 1 எம்.டி.பி., ஊழல் தொடர்பான முதல் வழக்கில், நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வயதை கருத்தில் வைத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு மன்னிப்பு வாரியம் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, அவரது தண்டனை காலம் பாதியாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது சிறை தண்டனை காலம் 12 ஆண்டுகளில் இருந்து, ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 2028 ஆக., 23ல் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிகிறது. அதேபோல், அவரின் அபராத தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory