» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும்: அதிபர் அறிவிப்பு..!

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 5:24:51 PM (IST)

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று பாராளுமன்றத்தில்  அதிபர்  மகமது முய்சு உறுதிப்பட அறிவித்துள்ளார். 

மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது. புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க் கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory