» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற எம்.பி.,!

புதன் 7, பிப்ரவரி 2024 3:47:11 PM (IST)



ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில முதன் முறையாக பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்பி ஒருவர் பதவியேற்றுள்ளார். 

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வருண் கோஷ். இவர் தனது 17-வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த வருண் கோஷ், பின்னர் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.

இந்த நிலையில் வருண் கோஷை நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வருண் கோஷ், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

இதன் மூலம் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை வருண் கோஷ் பெற்றுள்ளார். புதிய எம்.பி.யாக பதவியேற்றுள்ள வருண் கோஷிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் சக எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory