» செய்திகள் - விளையாட்டு » உலகம்

முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்

வியாழன் 8, பிப்ரவரி 2024 3:43:41 PM (IST)

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் திடீரென ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக் கூறி காசா மீது அதிரடி தாக்குதலை தொடங்கியது. நான்கு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. இந்த போரால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன.

குறிப்பாக போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அண்மையில் முன்வைத்தனர். இதன்படி, முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பாலஸ்தீன கைதிகள விடுதலை செய்ய வேண்டும்.

2-வது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிள் விடுவிக்கப்படுவார்கள். 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹமாஸ் கூறியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory