» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் குடியிருப்பு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: சிறுவர்கள் உள்பட 9 பேர் பலி

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:20:15 AM (IST)

காசாவில் குடியிருப்பு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்..

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதற்கிடையே காசாவை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகுவும் சபதம் விடுத்துள்ளார்.

அதன்படி இந்த போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களில் பலர் அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர். ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இந்தநிலையில் நேற்று காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.

இதில் அங்குள்ள சில வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் 6 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதன்படி நேற்று ஒரே நாளில் காசாவை சேர்ந்த 37 பேர் பலியாகினர். இதன் மூலம் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

அதுApr 21, 2024 - 12:26:44 PM | Posted IP 172.7*****

ஹமாஸ் கடத்தல் கொலைவெறி பிடித்த தீவிரவாதிகள் வாழும் குடியிருப்புப் பகுதி குண்டு வீசுவதில் தப்பே இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory