» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை: தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை!
புதன் 26, மார்ச் 2025 12:10:16 PM (IST)
பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி. கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து மரியாவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே மரியா பீபியை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகின. இதனையடுத்து ஆணவக்கொலை செய்ததாக போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)
