» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கும் முறையில் மாற்றம்: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 8:31:01 PM (IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தேர்தல் நாளுக்குப் பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டி யல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, நவீன, வளர்ந்த, வளரும் நாடுக ளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்பு களை செயல்படுத்த அமெ ரிக்கா தவறிவிட்டது. இந்தியாவும் பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோ–மெட்ரிக் தரவுத் தளத்துடன் இணைக்கின் றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரி–மைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோபைட னிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வாக்கா–ளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும்,அமெரிக்க குடிமக்களில் 9 சதவிகிதம் பேருக்கு (அதாவது சுமார் 2.13 கோடி பேருக்கு) குடியுரிமை இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)
