» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34% பரஸ்பர வரி விதிப்பு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:12:06 PM (IST)

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகளவில் சுமார் 25 நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகம் செய்துள்ளார். இதன்படி எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் "இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” தெரிவித்தார்.
பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த பரஸ்பர வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. ட்ரம்ப்பின் இந்த வரிவிதிப்புக்கு அயர்லாந்து, கனடா என உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)
