» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறிய புதின், இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளர்.
மேலும் இந்தியா - ரஷியா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷியா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பங்களிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)

பஹல்காம் தாக்குதல்: ஷாங்காய் மாநாடு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 11:06:18 AM (IST)
