» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். மோதல்கள் மேலும் வலுவடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவுடனான ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்று உறுதியளித்துள்ளார். இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

REALமே 10, 2025 - 12:34:18 PM | Posted IP 162.1*****

வந்துட்டான்யா இந்த கட்டப்பஞ்சாயத்து காரன், உலகத்தில் உள்ள எல்லா நாட்டிற்கும் இவனால்தான் பிரச்சினை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory