» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் காசாவுக்கு ஆதரவாக போராட்டம் : 65 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஞாயிறு 11, மே 2025 10:29:53 AM (IST)

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசா ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 65 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த போரில் இதுவரை 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களைத் தேடி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். எனவே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.
இந்த போரில் காசாவுக்கு ஆதரவாக ஏமன், லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் களம் இறங்கின. எனினும் போர் முடிந்தபாடில்லை. மாறாக அந்த நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இதனால் காசாவுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில் உலகின் பல நாடுகளிலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அங்குள்ள பட்லர் நூலகத்தில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய பதாகையை ஏந்திச் சென்றனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட 65 மாணவர்களை சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் நிலவுகிறது. அதேபோல் பர்னார்ட் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே காசா ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கூட்டாட்சி நிதியை நிறுத்தி மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)

பஹல்காம் தாக்குதல்: ஷாங்காய் மாநாடு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 11:06:18 AM (IST)

உண்மமே 15, 2025 - 07:30:49 PM | Posted IP 172.7*****