» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர் நிறுத்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

திங்கள் 12, மே 2025 9:13:08 AM (IST)

‘போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்’ என்று  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிறகு நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த ஒரு உடன்பாட்டை எட்டின. ஆனால் சில மணி நேரத்திலேயே இந்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், இந்தியாவின் கடும் கண்டனத்தை பெற்றது. உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.

இந்த நிலையில், போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. அது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ’பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் நிலைமையைக் கையாள்கின்றனர்’ என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory