» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர்
வியாழன் 15, மே 2025 5:36:04 PM (IST)

பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.
கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி.
இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. ஒரு தரப்பு அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்போது, மறு தரப்பால் பதில் தாக்குதல் நடத்த முடியாமல் போனதுதான் என்னைப் பொறுத்தவரை தெளிவான வெற்றி.
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிடம் தொலைதூர ஏவுகணைகள் இல்லை. மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஸ்காலப் ஏவுகணைகளுக்கு நிகராக பாகிஸ்தானிடம் ஆயுதம் இல்லை. தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறிக் கொள்ளலாம். அதனால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
இந்தியாவின் தாக்குதலில் நூர் கான் மற்றும் சர்கோதா முக்கிய போன்ற பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் படு மோசமாக சேதம் அடைந்தன. பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குனர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார். இவ்வாறு டாம் கூபர் கூறி யுள்ளார்.
அதேபோல் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஜான் ஸ்பென்சர் கூறுகையில், "இந்தியா தயாரிப்பு ஆயுதங்கள் தனது பலத்தை நிருபித்துள்ளன. ஆனால் சீன ஆயுதங்களால் தனது பலத்தை நிருபிக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)
