» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல்!
வியாழன் 29, மே 2025 11:49:46 AM (IST)

அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,"சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)
