» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:08:38 AM (IST)

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு அமைச்ச தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை, பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையில் (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலைத் தொடங்கியது. மேலும், ஈரான் தாக்குதலைத் தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
ஆனந்த்Jun 15, 2025 - 01:50:35 PM | Posted IP 162.1*****
இஸ்ரேல் என்ற புலி வேட்டையாடியதை பார்த்தோம் இனி புலி வேட்டையாடப்படுவதைப் பார்க்கலாம்
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

ஓனந்த அவர்களுக்குJun 16, 2025 - 03:11:46 PM | Posted IP 172.7*****