» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனாவும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று புடின் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 2 பார்வையாளர்களாக உள்ள நாடுகள் மற்றும் 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
ஷாங்காய் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசியதாவது: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனாவும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடனான எனது சந்திப்பின் விவரங்களை தலைவர்களுக்குத் தெரிவிப்பேன். டிரம்புடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட புரிதல்கள் உக்ரைனில் அமைதிக்கான வழியைத் திறந்து உள்ளன என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)


