» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சமூக வலைதளங்களுக்கு தடை: நேபாளத்தில் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் 9பேர் பலி!

திங்கள் 8, செப்டம்பர் 2025 4:11:10 PM (IST)



நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9பேர் உயிரிழந்தனர். 80பேர் படுகாயம் அடைந்தனர். 

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 

நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பேச்சுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பேச்சுரிமை ஆர்வலர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம் வளாகம் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர், இதில் 9பேர் பலியாகி இருப்பதாகவும். 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர். இப்போது அங்கு நடக்கும் ஆட்சியை பார்த்து முன்பு இருந்த மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory