» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலனளிக்காது : ரஷிய அமைச்சர்

வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:54:47 PM (IST)

இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது என்று ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்  தெரிவித்தார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

மேலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இந்தநிலையில் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலன் அளிக்காது என கூறி உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செர்ஜி லாவ்ரோவ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷியா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை டிரம்பின் முதல் பதவி காலத்தில் விடுக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகள் இந்த தடைகளை விதித்தபோது இருந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் முடிவுகளை எடுக்க தொடங்கினோம். இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள், அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கை களை எதிர்த்து வருகிறது. அந்த நாடுகள் அமெரிக்கா வின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

இந்த வரி அச்சுறுத்தல் அந்த நாடுகளின் பொருளா தார வளர்ச்சியை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது. இதனால் புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory