» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதி அரேபியா நிச்சயம் தலையிடும்: பாகிஸ்தான் அமைச்சர்

சனி 20, செப்டம்பர் 2025 5:20:44 PM (IST)



இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா நிச்சயமாக தலையிடும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார். 

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது: ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சவுதி சவுதிSep 21, 2025 - 12:14:42 PM | Posted IP 172.7*****

உலகத்தில் அமெரிக்காவை மாதிரி மோசமான நாடு கிடையாது, அமெரிக்கா / சவூதி நண்பர்கள், அமெரிக்கா தூண்டுதலால் தான் பாகிஸ்தான் இப்படி பேசுகிறார்கள்.

JAI HINDSep 21, 2025 - 12:13:33 PM | Posted IP 104.2*****

சவுதி அரேபியா உங்களை விரட்டும் காலம் வெகு விரைவில் வரும்.

True IndianSep 21, 2025 - 08:40:53 AM | Posted IP 172.7*****

அப்போது பாகிஸ்தான் நமது நாட்டில் தாக்குதல் செய்தால் சவூதி பொறுப் பேற்குமா

ஆஆஆஆமாSep 20, 2025 - 06:28:12 PM | Posted IP 172.7*****

தலையிட்டு வேடிக்கை தான் பார்க்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory