» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக் கூடாது: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

வியாழன் 25, செப்டம்பர் 2025 11:08:24 AM (IST)

ரஷ்யாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என்று கூறினார். இந்நிலையில் அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. சீன நிறுவனங்களுக்கும், ரஷிய நிறுவனங்களுக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி நடக்கின்றன. 

அந்த நிறுவனங்கள் எந்த மூன்றாம் நாட்டையும் குறிவைத்து செயல்படவில்லை. ஆகவே, ரஷியாவுடனான சீன நிறுவனங்களின் வர்த்தகத்தை எவ்விதத்திலும் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், எங்கள் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory