» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கூகுளில் இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

வெள்ளி 26, செப்டம்பர் 2025 12:40:04 PM (IST)



கூகுளில் இடியட் (Idiot) எனத் தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் வருகிறதே? என எழுப்பப்பட்ட கேள்விக்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேனும் பணியாற்றுகிறார்களா என்ற சந்தேகமும் எழும்.

கூகுள் தேடுபொறி தளம், வெப் க்ராலர்ஸ் எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான இணையதளங்களில் இருக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து, பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் கூகுள் இணையதளம் வந்து ஒரு ஒரு விஷயத்தைத் தேடும்போது, இந்த பட்டியலில், அவர் தேடுவதற்கு மிக நெருக்கமான ஒரு முடிவை இணையதளத்தில் காட்டுகிறது. ஆனால், இந்த பட்டியலிடுவதில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சின்ன தவறு நேர்ந்தாலும், தேடிக் கிடைக்கும் முடிவில் மிகப்பெரிய சங்கடத்தை சந்திக்க நேரிடலாம்.

இதுபோன்ற ஒரு சங்கடம்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்துக்கு நேர்ந்துள்ளது. அதாவது, கூகுளில் யாராவது இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது, கிடைக்கும் ஏராளமான புகைப்படங்களில் டொனால்ட் டிரம்ப் புகைப்படமே முன்னிலை வகிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory