» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

அமெரிக்காவில் உற்பத்தியாகும் அரிசி அதிகளவில் வீணடிக்கப்படுவதால், மலிவு விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிபர் டிரம்ப் வரிவிதிக்க பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகிதம் அளவுக்கு வரிகளை விதித்தார். இதனால், துணி, கடல் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் டாலர்களை விடுவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மலிவான வெளிநாட்டுப் பொருள்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்க சந்தையில் கொட்டப்படும் (இறக்குமதி செய்யப்படும்) அரிசியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார். இதனால், வரிகள் தொடரலாம்” என சூசகமாகத் தெரிவித்தார்.
லூசியானாவை தளமாகக் கொண்ட கென்னடி ரைஸ் மில்லின் தலைமை நிர்வாக அதிகாரி மெரில் கென்னடி கூறுகையில், "இந்தியா, தாய்லாந்து மற்றும் சீனா ஆகியவை அமெரிக்காவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. வரி விதிப்பு சரியான விதத்தில் வேலை செய்கிறது. நாம் அதை இரட்டிப்பாக வேண்டும்” என்றார்.
சமீபத்தில் ரஷிய அதிபர் விளாதீமிர் புதின், அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். அவரின் வருகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு.
எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாக ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் நேற்று தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாகத்தான் இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்கா வரிவிதிப்புகள் அதிகப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)


