» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

திங்கள் 19, ஜனவரி 2026 11:39:03 AM (IST)

காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory