» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்து விளையாடினால் கடும் வரி: உலக நாடுகளுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:01:42 PM (IST)
உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் 10 சதவீதமும், பின்னர் அதிகபட்சமாக 15 சதவீதமும் இறக்குமதி வரிகளை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் யாரும் விளையாட வேண்டாம். பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றி, கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்று வந்த நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும். அண்மையில் அந்த நாடுகள் ஒப்புக்கொண்ட வரி விகிதத்தை விடவும், தற்போதைய நிலைமை மோசமடையும் அளவுக்கு வரி உயர்வு இருக்கும். எனவே, உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் 15 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படவிருந்த வர்த்தக ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி விதிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்த போதிலும், அதிபருக்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள இதர சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். வர்த்தகச் சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ்: 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டப் பிரிவின்படி, தற்காலிக அடிப்படையில் 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை அதிகபட்சம் 15 சதவீதம் வரை உயர்த்த அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இதனைப் பயன்படுத்தியே அவர் வரியை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி பெருமிதம்!
சனி 11, ஜூலை 2026 12:21:14 PM (IST)

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: 40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்!
வெள்ளி 10, ஜூலை 2026 4:54:38 PM (IST)

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா!
வியாழன் 9, ஜூலை 2026 4:44:33 PM (IST)

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!
வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)


