» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி
சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28-ஆம் தேதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலுடன் இணைந்து நடத்திய இந்த ராணுவ அதிரடித் தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.
வளைகுடா பிராந்தியம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கி வரும் இந்தப் போர், நேற்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்துவிட்டது. எட்டாவது நாளாக இன்றும் இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. நீடித்து வரும் போரால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதலுக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடுகளைத் தாக்குவோம் என்றும், அண்டை நாடுகளைத் தாக்கியதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)


