» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அந்நாட்டின் முக்கிய மதகுருவான மவுலானா முகமது இத்ரீஸ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சர்சத்தா மாவட்டத்தில் உள்ள உட்மான்சாய் பகுதியில், மதகுரு ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் பாதுகாப்புப் போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இத்ரீஸ் சென்ற வாகனத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.இந்தத் தாக்குதலில் இத்ரீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு வீரர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதக் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பால் பாகிஸ்தானின் மூத்த மற்றும் மதிக்கப்படும் மதகுருவாக இத்ரீஸ் திகழ்ந்தார். அவரது மறைவு செய்தி கேட்டவுடன், ஏராளமான ஆதரவாளர்களும் பொதுமக்களும் மருத்துவமனை முன்பாகக் குவிந்தனர். பின்னர் அவரது உடல் இறுதிச் சடங்கிற்காகச் சொந்த கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:21:19 PM (IST)

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:42:06 AM (IST)

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:41:11 PM (IST)

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)


