» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை

ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)

இந்திய சமூகத்தை குறிவைப்பதோடு, நாட்டின் பன்முக கலாசார அமைதியை சீர்குலைக்கும் வகையிலான 14 சமூக ஊடகப் பதிவுகளை முடக்குமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிடுகிறது. 

யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைத்தளங்களில் இந்த பதிவுகளை முடக்குமாறு ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூர் பயனர்கள் இந்தப் பதிவுகளை அணுகுவதைத் தடுப்பதற்கான ‘‘அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும்’’ அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘இந்தப் பதிவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவை சீனாவைச் சேர்ந்த ஒரு தளத்தில் உருவானதாகவும், பின்னர் பிற தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் நமது பல்வகை சமூகத்தைத் தாக்குவதோடு, இன அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன. இங்கு அனைவருக்கும் சமமான இடம் உள்ளது. எனவே அந்த பதிவுகள் முடக்கப்படுகின்றன” என்று மந்திரி எட்வின் டோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory