» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 8:47:12 AM (IST)

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் திடீரெனச் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகப் பாரம்பரியத் தங்கச் சுரங்கத் தொழில் இருந்து வருகிறது. தொழிலாளர்கள் எவ்வித நவீனப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, அபாயகரமான முறையில் மண்ணைத் தோண்டி தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகே உள்ள ஜம்போய் கிராமத்தின் அபா பகுதியில் இயங்கி வந்த பெரிய தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, சுரங்கத்தின் மேல்பகுதி பயங்கர சத்தத்துடன் திடீரெனச் சரிந்து விழுந்தது. இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் உள்ளூர் மக்களின் உதவியோடு மண்ணைத் தோண்டி உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகள் பல அடி ஆழத்திற்கு இருந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் நீடித்தது. தற்போது மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 107-ஐக் கடந்துள்ளதாக உள்ளூர் சுரங்கச் சங்கத்தின் மூத்த அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
படுகாயமடைந்த தொழிலாளர்களுக்குத் தங்கள் நாட்டு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக பக்கத்து நாடான கேமரூன் அரசு அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதப் பாதுகாப்புமின்றி இந்தச் சுரங்கத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்தது யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்ச நீதிமன்றம் அனுமதி: 9 மாதங்களுக்கு பின் இம்ரான் கானை சிறையில் சந்தித்த குடும்பத்தினர்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:12:37 PM (IST)

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:51:31 PM (IST)

பனிக்கரடியை பயமுறுத்திய கப்பல் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நார்வே அரசு அதிரடி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 11:00:26 AM (IST)

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:21:19 PM (IST)

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:42:06 AM (IST)

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:41:11 PM (IST)


