» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!

வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)



நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ள‌தாக தகவல்கள் வெளியாகியுள்ள‌ன.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிா்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.

வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 500-ஐ கடந்தது.

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிக யாத்திரை சென்ற 288 இந்தியர்கள் உள்பட 1000-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் தகவல் தொடர்பு கட்டமைப்பு முற்றிலும் சிதைந்திருக்கும் நிலையில், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காணாமல் போனவர்களின் நிலையை அறிய முடியவில்லை. மேலும், இந்தியர்கள் உள்பட காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory