» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் எச்சரிக்கை

ஞாயிறு 17, டிசம்பர் 2023 5:40:27 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்  துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம். நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory