» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஞாயிறு 17, டிசம்பர் 2023 6:05:33 PM (IST)

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இருப்பினும் பெரிய வெள்ளம் ஏற்படாததால் காலை 10 மணி வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்பு மழைப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் காட்டாற்று வெள்ளத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மெயின் அருவியில் பாது காப்பு வளைவை தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்ட தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு உடனடியாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory