» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள்: நெல்லையில் பரபரப்பு!

வெள்ளி 26, ஜனவரி 2024 12:20:57 PM (IST)



திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை திமுக மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணியைச் சார்ந்த 51 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திமுக 44 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இதில் மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன், துணை மேயராக ராஜூவும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு மற்றும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தலைமையின் கடுமையான முயற்சியின் காரணமாக திமுக உறுப்பினர்கள் வெளியூர்களுக்கு அழைத்து செல்லப்பட்டதால் யாரும் கலந்து கொள்ளவில்லை அதனால் மேயர் பதவி தப்பித்தது.
  
இந்நிலையில் 75ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில், துணை மேயர் ராஜூ முன்னிலையில், மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த மூன்று பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது மேயர் சரவணன் கொடியேற்றி வைத்த பிறகு அவர் பேசத் துவங்கியதும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவை மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மேயருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டியதாக தெரிகிறது.

தலைமை முயற்சித்த பிறகும் மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. வரும் 30ஆம் தேதி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிலும் மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் எதிரொலிக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. 


மக்கள் கருத்து

sankarJan 27, 2024 - 09:53:55 AM | Posted IP 172.7*****

பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!

sankarJan 27, 2024 - 09:53:05 AM | Posted IP 172.7*****

பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory