» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தில் குடியரசு தின விழா

சனி 27, ஜனவரி 2024 9:54:38 AM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளில் குடியரசு தின விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியி;ல் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தா ஆயுர்வேத டாக்டர் கனகவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.. 

மாணவி சல்ஹா வரவேற்றார். மாணவிகள் ஷெரின் பாத்திமா, மாதுரி ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். மாணவ, மாணவிகளின் சிலம்பம், யோகா, டேக்வாண்டோ,  ஸ்கேட்டிங், வில்வித்தை, கீ போர்டு, டிரில் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவி தானியா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வரும் தாளாளருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். டாக்டர் கனகவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து கல்வி, விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory