» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அல்வா போலவே திருநெல்வேலி மக்களும் இனிமையானவர்கள்: பிரதமர் மோடி பேச்சு

புதன் 28, பிப்ரவரி 2024 12:55:50 PM (IST)

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள் என்று பாஜக பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசினார்.

நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள்.

தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம், எதிர்காலத்தை பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள். வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மதிப்பு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறையில் வெளிநாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். உகஜ்வாலா திட்டத்தின் மூலம் 40 லட்சம் பெண்கள் சமையல் எரிவாயு பெற்றுள்ளனர். எனது திட்டங்களால் பயனடைந்த பெண்கள் எனக்கு ஆசி வழங்குகிறார்கள். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி வரை சென்று சேருகிறது என்றார். பாளையங்கோட்டையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.


மக்கள் கருத்து

rajtutFeb 28, 2024 - 01:31:39 PM | Posted IP 172.7*****

அல்வா போலவே திருநெல்வேலி மக்களும் இனிமையானவர்கள்.... அந்த அல்வாவையே உங்களுக்கு தருவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory