» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 1, மார்ச் 2024 3:57:00 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.03.2024) நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 25.03.2024 முடிய நடைபெறுகிறது. இடைநிலைக்கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுகள் 26.03.2024 முதல் 08.04.2024 முடிய நடைபெறுகிறது.

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வினை 20,243 மாணவர்களும், கடந்த ஆண்டு தோல்வியுற்ற 883 மாணவர்களும் மற்றும் தனியார் 265 மாணவர்களும் ஆக மொத்தம் 21,391 மாணவர்களும், மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 19,796 மாணவர்களும் மற்றும் தனியார் 376 மாணவர்களும் ஆக மொத்தம் 20,172 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மையங்கள்-69, பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலை 1 என மொத்தம் 70 மையங்களும், இடைநிலை விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மையங்கள் -93 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கும், தேர்வுகள் முடிந்த பிறகு தத்தமது இடங்களுக்கு செல்லவும் வசதியாக போதுமான போக்குவரத்து வசதிகளும், தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஆகியவற்றில் தேவையான சூழ்நிலையில் பயன்படுத்த வசதியாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 69 தேர்வு மையங்களுக்கும் மற்றும் இடைநிலை விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 93 தேர்வு மையங்களுக்கும் தேர்வு நடைபெறும் நாட்களில் காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்கள் வழியாக வினாத்தாட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆய்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory