» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை அருகே பெண் வெட்டிக்கொலை; மகளுக்கும் அரிவாள் வெட்டு: 2பேர் கைது

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:15:55 AM (IST)

செங்கோட்டை அருகே பெண்ணை வெட்டி கொலை செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜூவ் நகர் பகுதியை சார்ந்தவர்  சுடலைமாடன் என்பவரது  மனைவி கோமதி (48) இவர்களது மகள் பவித்ரா (24). இவருக்கும் மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் பவித்ரா  குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது குத்துக்கல்வலசை பகுதியைச் சார்ந்த அருணாசலம் என்பவரது மகன் சுரேஷ் (25) என்பவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ் பவித்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்குப் பவித்ரா தனது வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். 

அதன்படி சுரேஷ் பவித்ராவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.அதற்கு பவித்ராவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நேற்று மாலையில் விஸ்வநாதபுரம், ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பவித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பவித்ராவின் தாய் கோமதிக்கும் இவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது தகராறு முற்றிய நிலையில் சுரேஷ்  மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோமதியை வெட்டியுள்ளார். 

இதை தடுக்க முயன்ற பவித்ராவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இதில் தொடர்புடைய குத்துக்கல் வலசை பகுதியைச் சார்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சுரேஷ் (25) என்பவரை கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக செயல்பட்ட 19 வயதுடைய சிறுவன் ஒருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory