» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 8:10:14 AM (IST)
மத்திய அரசின் திட்டங்ளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நெல்லை தச்சநல்லூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, மதச்சார்பின்மை மற்றும் மகாத்மா காந்தி குறித்து பேசினார். உண்மையில் அவர் மதச்சார்பின்மையை கடைபிடிப்பதில்லை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு வாழ்த்து சொல்லும் முதல்-அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்.ஒரு குறிப்பிட்ட மதத்தை புறக்கணிக்கும் இவருக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பேசத் தகுதியில்லை. தி.மு.க. எதிர்கட்சியாக இருந்த போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, அதில் பல குளறுபடிகளை செய்து திட்டத்தையே நிறுத்தி வைத்தது. ஆனால் பிரதமர் மோடி அந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தினார்.
பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் சொல்லியுள்ளார். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இந்த இடங்களை எல்லாம் ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்தவர்.
பிரதமர் மோடி தமிழர்களின் கலாசாரத்தை உலக அளவில் கொண்டு சென்றவர். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முதல்-அமைச்சர் எந்த ஆதாரமும் இன்றி குறை சொல்வது ஏற்புடையது இல்லை. நெல்லையில் முதல்-அமைச்சர் திறந்து வைத்த ரூ.150 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.
இதில் ரூ.100 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மீதமுள்ள தொகைதான் மாநில அரசின் நிதி. மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு, மாநில அரசு தன் ‘ஸ்டிக்கரை’ ஒட்டும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. இந்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: பெண் கைது - இளம்பெண் தற்கொலை முயற்சி!
வெள்ளி 8, மே 2026 8:22:20 AM (IST)

பழைய குற்றாலத்தில் ரூ.20 நுழைவு கட்டணம் : காலை 7 முதல் மாலை 5 வரை மட்டுமே அனுமதி!
வியாழன் 7, மே 2026 10:35:05 AM (IST)

வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் தொழிற்பழகுநர் முகாம்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
புதன் 6, மே 2026 8:44:22 PM (IST)

நெல்லையில் ஓடை போல் மாறிய தாமிரபரணி ஆறு: அணைகளின் நீர்மட்டம் சரிவு!
புதன் 6, மே 2026 8:26:37 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
புதன் 6, மே 2026 4:15:21 PM (IST)

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)


