» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)


கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் பாமா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்றத் தலைவி இ. பார்வதி, துணைத் தலைவர் க. இசக்கிபாண்டியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜார்ஜ் ராபர்ட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பாத்திமா ஷிரின், நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மு. பீர்முகம்மது, ஒருங்கிணைப்பாளர் மீனாள் நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சரவணன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

இதேபோல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) சத்யஸ்ரிஜா, ஆசிரியர்கள் மாரியம்மாள், இந்திரா, பியூலா உஷாராணி, செல்வ ஜெயராணி, பிளாரன்ஸ் ஜெயராணி, மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory